வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (16:51 IST)

சேலம் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்து: முதல்வரின் நிவாரண நிதி அறிவிப்பு..!

Stalin
சேலம் மாவட்டம் குப்பனூர் அருகே வெள்ளையம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் என்ற 55 வயது நபர் இறநத நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10.00 மணியளவில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிவகாசியை சேர்ந்த திரு. ஜெயராமன் (வயது 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம், சின்னனூரைச் சேர்ந்த திரு. சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த திரு. முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த திரு.ஜெயராமன் என்பவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Edited by Siva