வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (08:41 IST)

வெயில் கொளுத்த போகுது டோய்... காட்டு காட்டுனு காட்டும் கத்திரி!!

தமிழகத்தில் வெயில் மண்டைய பொலந்து எடுக்கும் நிலையில், இன்று முதல் அக்னி நட்சத்திரம் அதாவது கத்திரி வெயில் துவங்கியுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகிவிட்டது. ஆம்,. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. நகர் பகுதிகளில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. 
 
இதையடுத்து ஃபானி புயல் காரணமாக தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமார்ந்து போனதுதான் மிச்சம். தமிழகத்தின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகியப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. 
இதில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை 26 நாட்களுக்கு கத்தரி வெயில் கொளுத்த போகுது. இந்த கத்தரி வெயில் காலக்கட்டத்தில் அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசம் எனவும் சென்னை வானிலை மையம்  எச்சரித்துள்ளனர்.