1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 30 மார்ச் 2018 (10:01 IST)

பச்சோந்தி கட்சிகளிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்: கஸ்தூரி காட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிந்துவிட்ட நிலையில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனமாக இருப்பது தமிழக அரசியல் கட்சி தலைவர்களையும், பொதுமக்களையும் குறிப்பாக விவசாயிகளையும் கொதிப்படைய செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் இருப்பதற்கும், காங்கிரஸ் கட்சி இதற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதற்கும் முக்கிய காரணம் கர்நாடக தேர்தல்தான்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எந்த கட்சி ஆதரவு கொடுக்கின்றதோ, அந்த கட்சி கர்நாடக தேர்தலில் படுதோல்வி அடையும் என்பது உறுதி. இந்த நிலையில் கஸ்தூரி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:


தேசிய கட்சிகளுக்கு கண்டிப்பாக கர்நாடகம்தான் முக்கியம். அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களுக்கு கூஜா தூக்கும் நம் அக்மார்க் தமிழ் கட்சிகளை எங்கு நோவது? மாறி மாறி கூட்டணி வைக்கும் பச்சோந்தி கட்சிகளிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்' என்று கூறியுள்ளார்.