1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (19:24 IST)

செந்தில் பாலாஜியை திட்டுவதற்காக ஒரு விழா? - வீடியோ

கரூர் திருமாநிலையூர் அரசுப் பேருந்து பணிமனை பின்புறம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நேற்று காலை முதல் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. 


 

 
இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று ஆரம்பித்து,. இந்த கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் என்று ஒருவர் உள்ளார் என்றும், அவர் தற்போது அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக உள்ளார். அந்த தொகுதி மக்களுக்கு இன்று வரை நன்றி சொல்ல கூட வரவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர் என்று முழுக்க, முழுக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாடி பேசினார். 
 
பின்பு, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால், தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசிய போது. எம்.ஜி.ஆரின் சிறப்புகளை கூறியதோடு, அதே வழியில், முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்குகள் குறித்தும் எடுத்துக் கூறினர். 
 
பின்னர் முடிவில் பேசிய, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆரின் சிறப்புகளையும், அதே போல, ஜெயலலிதாவின் சிறப்புகளையும் எடுத்துக் கூறியதோடு, பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்போது எடப்பாடி பழனிச்சாமி அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குகள் கேட்டதையும், அப்போது, இவருக்கா ஒட்டுகள் கேட்கின்றீர்கள் என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூறியதாகவும் கூறினார்.
 
மேலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் என்பதினால் தான், வாக்குகள் கேட்டதாகவும் மேடையில்  எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் அவரும் நன்றி மறந்து விட்டார் என்றும் முழுக்க, முழுக்க முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜி யை மட்டுமே குறை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் ஒரங்கட்டப்பட்டனர். அரசு விழாவில், அரசியல் பேசிய அரசியல்வாதிகளினால் அரசு விழா விரக்தியில் ஆழ்ந்தது. மேலும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் ஒரங்கட்டப்பட்டதோடு, ஒரமாகவும் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர். 
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி பேசிய உடனேயே, மக்கள் எழுந்து விட்டதை புகைப்பட நிபுணர்கள் மற்றும் வீடியோ கேமிராமேன்கள் படம் எடுப்பதை பார்த்த போலீஸார் அவர்களை அடக்குமுறையில் அமரவைத்தனர். இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மிகுந்த விரக்தி அளித்ததாக, அரசியல்வாதிகள் பலரும் கூறினர். 
 
இந்நிலையில் ஒரு எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை திட்டுவதற்காகவா இவ்வளவு கோடி செலவு என்றும், அப்படியே அரசியல் பேசியவர்கள் ஏன் தி.மு.கவை பற்றியும், மத்திய அரசின் பங்கு குறித்தும் பேசவில்லை என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்