வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (22:39 IST)

நேத்து கட்சியில் சேர்ந்த செந்தில்பாலாஜிக்கு சீட்டா? கரூரில் வன்முறையில் இறங்கிய திமுகவினர்

அதிமுகவில் இருந்து அதன்பின் தினகரன் அணிக்கு தாவி, சமீபத்தில் திமுகவில் இணைந்தவர் செந்தில் பாலாஜி. இவருடைய வருகையால் கரூரில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட செந்தில் பாலாஜி விண்ணப்பம் செய்திருந்தார். அவர் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கரூர் தொகுதி கிடைத்துவிடும் நிலை இருப்பதாக திமுக வட்டாரங்களில் செய்தி பரவியது
 
இதனால் கரூர் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். கட்சியில் சேர்ந்து ஒருசில மாதங்கள் கூட ஆகாத ஒருவருக்கு எம்பி சீட்டா? அப்படியென்றால் வருடக்கணக்கில் திமுகவுக்காக உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை? என்று ஆவேசமாக தங்களுடைய எதிர்ப்பை கரூர் திமுகவினர் வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களையும் பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தினர்
 
இந்த நிலையில் திமுகவில் உள்கட்சி பிரச்சனை என்றால் அண்ணா அறிவாலயத்தை அடித்து நொறுக்குங்கள், பொதுச்சொத்துக்களை ஏன் சேதப்படுத்துகின்றீர்கள் என சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.