ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (09:28 IST)

தமிழகத்தில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர்? – தேர்தல் நடத்துவது எப்படி?

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் கரூரில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தல் நடைமுறை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் மீதான ஆய்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகபட்சமான கரூர் தொகுதியில் 84 பேர் போட்டியிட உள்ளனர். அளிக்கப்பட்ட 90 வேட்புமனுக்களில் தள்ளுபடி செய்த மனுக்கள் போக 84 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 84 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அமைப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் இடம்பெறும். இந்நிலையில் 84 வேட்பாளர்களுக்காக அதிகமான வாக்கு எந்திரங்கள் வைத்தாலும் மக்கள் அதில் குறிப்பிட்ட வேட்பாளர் மற்றும் சின்னத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.