1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (08:37 IST)

கொரோனா பாதிப்பு எதிரொலி; ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!

கொரோனா பாதிப்பு எதிரொலி; ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா தளமான ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தளங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

அதன்படி சுற்றுலா மற்றும் புனித தலமான ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.