செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (08:51 IST)

”பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார் கமல்”.. விளாசும் அதிமுக நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில் பின்னங்கால் பிடரியில் பட கமல் ஒடுகிறார் என நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது.

வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கூறினார்.

இந்நிலையில் ”கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம்  தான் என்பதை மக்கள் நீதி மய்யத்தின் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உணர்த்துகிறது” என அதிமுக நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது.

மேலும்” உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துவிட்டு பின்னாங்கால் பிடரியில் பட கமல்ஹாசன் ஓடுவது, அடுத்தவர்கள் மீது குற்றங்களை அடுக்கினால் அதிகார இருக்கை தனக்காகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம்” எனவும் காட்டமாக எழுதியுள்ளது.

கமல்ஹாசன் அதிமுக அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கமல்ஹாசனின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளையும் அதிமுகவினர் வைத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக நாளிதழில் இவ்வாறு கமல் விமர்சிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.