1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sarath Kumar questions Rajinikanth about Local Body election

யாரு கேட்டா உன் ஆதரவ...? சூப்பர் ஸ்டாரை சீண்டிய சுப்ரிம் ஸ்டார்!

சரத்குமார்
உங்களிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.  
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது.  
 
வரும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, மன்றத்தின் பெயர் கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது. ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதை குறிப்பிட்டு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமார், ரஜினியிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை அவர்  தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கேட்டுள்ளார். சரத்குமாரின் கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
இந்த ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா... இந்த ஏர்டெல் சேவை உங்களுக்குதான்!!