1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (11:42 IST)

ரஜினி ஊருக்கு வேணா சூப்பர் ஸ்டாரா இருக்கலாம், ஆனா... வெளுத்து வாங்கிய காமெடி நடிகர்!!

நடிகர் ரஜினி தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் அவர் சூப்பர் ஸ்டராக இருக்கலாம் என அரசியல்வாதியும் காமெடி நடிகருமான கருணாஸ் பேசியுள்ளார். 
 
ரஜினிக்கு வருமான வரித்துறையினர் விளக்கு அளித்ததன் மீது சந்தேகம் எழுப்பி கருணாஸ் பின்வருமாறு பேசியுள்ளார். ரஜினிகாந்துக்கு வருமான வரிச் சலுகை கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையா என தெரியவில்லை. அப்படி நிச்சயமாக கொடுக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. 
 
காரணம், தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் அவர் சூப்பர் ஸ்டராக இருக்கலாம். ஆனால், அவரும் இந்தியாவின் குடிமகன்தான். ஒருவேளை ரஜினி, பாஜகவுக்கு சாதமாக இருப்பதால், இந்த உதவி நடைபெற்றிருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
 
ரஜினியின் எதிர்கால அரசியலை கருத்தில் இதில் ஏதாவது உள் அரசியல் இருக்குமோ என்று பொதுமக்கள் மத்தியில் எழுப்பப்படும் சந்தேகம் எனக்கும் உள்ளது என்று கருணாஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.