செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (20:17 IST)

திமுக போட்டி சட்டமன்றத்தில் பங்கேற்ற கருணாஸ்!

கச்சேரி நடத்த வாய்ப்பு கொடுத்த சபாநாயகர் மக்கள் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 
நேற்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதைத்தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
 
அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏ. கருணாஸ் கலந்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய கருணாஸ், சட்டமன்றத்தில் கச்சேரி நடத்த வாய்ப்பு கொடுத்த சபாநாயகர் மக்கள் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.