செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (12:11 IST)

புதுக்கோட்டையில் எடப்பாடியார்; பிரச்சார ப்ளானை ரத்து செய்த ஸ்டாலின்!

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் முதல் பிரச்சாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு திருவாரூர் புறப்பட்டு சென்று அங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் இன்று புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென புதுக்கோட்டை பிரச்சார பயணத்தை ரத்து செய்த ஸ்டாலின் சேலம் சென்று அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.