ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (18:28 IST)

ரஜினி, கமலுக்கு எத்தன சதவீதம் ஆதரவு? - கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு 10 சதவீத வாக்குகள் கூட பதிவாகது என தெரியவந்துள்ளது.

 
பல வருடங்களாக தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் தான் அரசியலுக்கு வருவதாய் பஞ்ச் வசனம் பேசி அவரின் ரசிகர்களின் பிபியை எகிற வைத்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி, தான் அரசியலுக்கு வருவதாய் அறிவித்தார். ஆனால், கட்சியின் பெயரை பின்னால் அறிவிப்பேன் எனவும், அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடையை கட்சி போட்டியிடும் என அறிவித்தார். 
 
ஆனால், அதன்பின் வழக்கம் போல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இடையிடையே ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
 
ஒருபக்கம் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரும் ரஜினியைப் போல் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
எனவே, பொதுமக்களிடையே இவர்களுக்கு எத்தனை சதவித ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதுபற்றி பிரபல தனியார் தொலைக்காட்சி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 8,25 பேரிடம் தனித்தனியாக கருத்துக்கணிப்பை நடத்தியது. 
 
இதில், லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் கமல் மற்றும் ரஜினிக்கு 10 சதவீத வாக்குகள் கூட பதிவாகாது என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதேபோல், விஜயகாந்த், சீமான் போன்றோருக்கும் பெரிய ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
 
இதன் மூலம் தமிழகத்தின் திராவிட கட்சிகளின் மவுசு இன்னும் குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
அதேநேரம், வாக்களிக்கும் நாளில் மக்களின் மனநிலை என்ன என்பதை பொறுத்தே உண்மையான நிலவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.