1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (20:20 IST)

மு.க.தமிழரசு வீட்டுக்கு சென்ற கருணாநிதி

கோபாலபுரத்தில் இருந்து டிரஸ்ட்புரத்தில் உள்ள தனது மகன் மு.க.தமிழரசு வீட்டுக்கு கருணாநிதி சென்றுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி வெகு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை. இவரை காண அரசியல் தலைவர்கள் உள்பட பிரபலங்கள் பலரும் அவ்வப்போது கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம்.
 
அண்மையில் கருணாநிதி தனது மகள் கனிமொழி வீட்டிற்கு சென்று வந்தார். இந்நிலையில் தற்போது டிரஸ்ட்புரத்தில் உள்ள தனது மு.க.தமிழரசு வீட்டுக்கு சென்றுள்ளார்.