திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கண் திருஷ்டியை போக்க சில வழிமுறைகள்...!

கெட்ட எண்ணங்களையும், கொடூர சிந்தனைகளையும் திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டின் உள்ள வாசலில் வைக்கலாம்.  கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வைக்கலாம்.
மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம். ஆகாச கருடன் என்ற ஒரு வகை கிழங்கை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விட்டால் பிரச்சனைகள் நீங்கும்.
 
கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து வாரம் ஒருமுறை குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் போன்றவை பிறந்த கிழமை அல்லது  செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளித்து வந்தால் நல்லது.
 
பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும்
இருக்கிறது.
கடல் தண்ணீரை சிறிது எடுத்து, சாதாரண தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில்  குளிக்க முடியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு  கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்.