புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:48 IST)

தலைவர் ஸ்டைலே தனி... தலைமையை புகழ்ந்து தள்ளிய பாலு!

கருணாநிதி தலைவராக இருந்தபோது கட்சி செயல்பட்டதை விட 10 மடங்கு அதிக செயல்பாடுகளோடு இப்போது கட்சி இருக்கிறது என ஸ்டாலினை புகழ்ந்துள்ளார் டி.ஆர். பாலு.
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.    
 
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளை குறித்து டி.ஆர். பாலு பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு... 
 
தலைவர் அனைத்து பிரச்சினைகளையும் மிக நுணுக்கமாக அணுகுகிறார். அனைவரும் உஷாரா இருங்க என கூறுகிறார். தமிழ்நாட்டிலிருக்கும் மீடியாக்கள் திமுக பெறப் போகும் வெற்றியை பார்க்கதான் போகிறீர்கள். 
 
திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பான தலைவராக இருக்கிறார். இந்திய தலைவர்கள் அனைவரும் ஸ்டாலினை பல விஷயங்களில் தலைமை ஏற்க அழைப்பு விடுக்கிறார்கள். 
 
முன்பு கருணாநிதி தலைவராக இருந்தபோது கட்சி செயல்பட்டதை விட 10 மடங்கு அதிக செயல்பாடுகளோடு இப்போது ஸ்டாலின் தலைமையில் செயல்படுகிறது என புகழ்ந்துள்ளார்.