வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (11:44 IST)

நீட் தேதி அறிவித்த ஒன்றிய அரசு: திருமா கண்டனம்!

நீட் தேர்வை ரத்து செய்து அதற்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என நேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். இந்த தேர்வின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கையை 155-ல் இருந்து 296 உயர்த்தப்பட்டுள்ளது. 
 
மேலும், கடந்த ஆண்டு 3182 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்து அதற்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில், செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.