நுனி கிளையில் உட்கார்ந்து, அடிக்கிளை வெட்டுகிறார்: ஜெயகுமாருக்கு பாஜக கண்டனம்..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்த நிலையில் நுனி கிளையில் உட்கார்ந்து கொண்டு ஜெயக்குமார் அடி கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறார் என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
தமிழகம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார். இதே ரீதியில் சென்றால் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று அண்ணாமலைக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜெயகுமார் மட்டுமின்றி அதிமுகவின் மற்ற அமைச்சர்களும் அண்ணாமலையை விமர்சித்தனார். இந்த நிலையில் அண்ணாமலையை விமர்சித்த ஜெயக்குமாருக்கு பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 19 கோடி உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தை செடி என்று ஜெயக்குமார் கூறுகிறார் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியில் வெட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva