புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (11:42 IST)

திமுகவின் மாஸ்டர் பிளான்!!! இளம் தலைமுறையினரை கவர திட்டமிட்டு போடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை!!!

சற்று முன்னர் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் சார்ந்த பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்து பணிகளையும் முடித்துவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 20ஆம் தேதி முதல் திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
 
இதில் மாணவர்கள் கல்வி மற்றும் இளம் தலைமுறையினர் நலன் சம்மந்தமாக பல அம்சங்கள் இருக்கிறது. 
 
* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்
 
* மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்
 
* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்
 
* மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்
 
* 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை
 
* சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பாலியல் ரீதியான சம்பவங்களை தவிர்க்க புதிய சட்டம்