எந்த மாநில தேர்தலிலும் மோடியால் வெல்ல முடியாது: கார்த்திக் சிதம்பரம்
இந்தியாவில் குஜராத் தவிர எந்த மாநில தேர்தலிலும் மோடியால் வெல்ல முடியாது என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மக்களுக்கு நேரடியாக நலத்திட்டங்கள் அறிவித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் பாணியை மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்றும் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி பலமாக உள்ளது என்றும் குஜராத் தவிர எந்த மாநிலத்திலும் மோடியால் வெல்ல முடியாது என்றும் கூறினார். பாஜகவின் இந்துத்துவா என்பது சமஸ்கிருத வடநாட்டு மேல் தட்டு மக்களுக்கான இந்துத்துவா என்றும் தேர்தல் நடக்கும் போது ரெய்டு என்பது வாடிக்கையாகிவிட்டது என்றும் இந்திய அளவில் சாதிவாரியாக சமூக பொருளாதார கணக்கெடுப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by mahendran