எங்களை விக்கெட் எடுக்க விடாமல் தேர்தல் ஆணையம் தடுக்கிறது: உத்தவ் தாக்கரே
பாஜக பந்தை அடித்து விளையாட தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் அதே வேளையில் எங்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுக்கிறது என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ்தேவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியுள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தபோது உத்தரபிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு மத்திய பிரதேச மக்களை இலவசமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்துத்துவா அடிப்படையில் பிரச்சாரம் செய்ததால் சிவசேனா தலைவர் பால் தாக்கரே வாக்குரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
ஆனால் அதே இந்துத்துவா அடிப்படையில் தற்போது பிரச்சாரம் செய்து வரும் பாஜகவை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. பந்தை அடித்து விளையாட பாஜகவை அனுமதிக்கும் தேர்தல் ஆணையம், எங்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Edited by Siva