வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:10 IST)

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுவதற்கு கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் வாழ்த்து!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் பா சிதம்பரத்தின் 79 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கொருக்குப் பேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்  500 பேருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
 
இந்த முகாமை கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி மருத்துவர் ஸ்ரீநிதி சிதம்பரம் துவக்கி வைத்து மருத்துவ சிகிச்சைகளை கேட்டறிந்தார்.
 
மருத்துவ முகாமில் இசிஜி எக்கோ சர்க்கரை நோய் கண்டறிதல் ரத்த அழுத்தம் கண் பரிசோதனை பல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிதி......
 
காங்கிரஸ் பேரியக்கத்தின்  சார்பாக எனது மாமனார் பா சிதம்பரத்தின் 79 -வது பிறந்த நாளை மக்கள் பயன்படும் விதமாக நடைபெறும் மருத்துவ  முகாமில் கலந்து கொள்வது பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
 
பல நோய்கள் வருவதற்கு முன் கண்டறிவதற்கும் முதலிலேயே சிகிச்சை பெறுவதற்கும் நோய் வருவதற்கு முன் அதை குணப்படுத்துவதற்கும் மிக மிக முக்கியமான வழிகாட்டியாக மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
 
இந்தியாவில் ஒரு காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆயுட்காலம் 39 வயது தான் இருந்தது
பல தொற்று நோய்களில் மக்கள் இருந்தார்கள்  
 
அதன் பிறகு சுதந்திரத்திற்கு பிறகு அதிக நல்ல திட்டங்கள் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு அரசு சிகிச்சை முகாம் மூலமாக இது போன்ற ஏகப்பட்ட திட்டங்கள் தேசிய முகாம்கள் அதிகம் நடத்தப்பட்டதால் தொற்று நோய்கள்  ஆதிக்கம் குறைந்துள்ளது.
 
தற்பொழுது முக்கியமான பிரச்சனைகள் நீரழிவு நோய் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் புற்றுநோய் இதுபோன்ற தொற்று நோய்கள் அதிகமாக உள்ளது.
 
உலகத்திலேயே சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா விளக்குவதாக ஒரு ஆய்வில் தெரிய வருகிறது இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
 
இது போன்ற மருத்துவ முகாம்கள் நடத்தும் பொழுது  சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் இதய நோய் உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளை சீக்கிரமாக கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்து தீர்வு காண முடியும்
அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி.
 
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
 
மருந்து மாத்திரைகளில் கலப்பட மருந்துகள் வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது இருந்தாலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
 
பொதுமக்கள் உடல்நிலை சரியில்லை என்றால் நேரடியாக மருந்து கடைக்கு சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்கிறார்கள் 
 
தலைவலி காய்ச்சல் என்றால் கூட பழைய மருந்து சீட்டுகள் அல்லது மருது கடைகளுக்குச் சென்று மாத்திரைகளை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் உட்கொள்வதால் பல்வேறு உடல் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
 
அரசு மருத்துவ மனைகளில் அதிகமாக தரமான இலவசமாக தேவையான மருந்துகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் 
 
ஆனால் மக்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் தலைவலி காய்ச்சல் என  உடல் நோயால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லாமல்  மருந்து கடைகளுக்கு செல்வதால்  மருந்து மாத்திரைகளுக்கு கலப்படம் செய்வதற்கு வழி வகுப்பதாக தெரிவித்தார்.