வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2024 (09:45 IST)

துணை முதல்வராக பொறுப்பேற்றிற்கும் உதயநிதி ஸ்டாலின்க்கு - நடிகர் நாசர் வாழ்த்து.......

பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம், 
 
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
 
மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.