தமிழக காங்கிரஸ் தலைவராக விருப்பம் உள்ளது: ஓப்பனாக கூறிய கார்த்தி சிதம்பரம்..!
தமிழக காங்கிரஸ் தலைவராக தனக்கு விருப்பம் இருப்பதாகவும் அகில இந்திய காங்கிரஸ் விரும்பினால் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி இருந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க தனக்கு விருப்பம் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்த்தி சிதம்பரம் போய் உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக தனக்கு திறமை இருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியை நன்றாக கொண்டு செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அகில இந்திய தலைமை விரும்பினால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva