1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (16:10 IST)

இந்த ஞானம் ஏன் அப்போது வரவில்லை: துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என துரைமுருகன் பேசியதற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று வேலூரில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘காங்கிரஸ் கட்சிக்கு பெரிதாக ஓட்டு வங்கி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்றும் கூறினார்.
 
துரைமுருகனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும், காங்கிரஸ் கூட்டணி ஒருவேளை இல்லாமல் இருந்திருந்தால் அவர் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது