வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (10:13 IST)

காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடகம்: ஏன் தெரியுமா?

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறிய கர்நாடக அரசு இன்று காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. கர்நாடாகாவில் உள்ள கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக கபிணி அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருவதால் கபிணி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபிணி அணை நிறையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று கபிணி அணையில் இருந்து தண்ணிரை திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்களை நியமனம் செய்யாமல் தாமதம் செய்து வரும் கர்நாடகா, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை கூட மதிக்காமல் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட மறுத்தது. இதனால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணிர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணை நிரம்பியதால் தற்போது தண்ணீர் திறந்துவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.