தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Last Modified திங்கள், 11 ஜூன் 2018 (15:08 IST)
கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவா, கர்நாடகா, கேரளா, மும்பை, தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :