திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (20:08 IST)

நாளை வரை தான் கெடு: கர்நாடக அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்ட மத்திய அரசு

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்றும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் வெறும் 38 இடங்களில் வெற்றி பெற்ற ம்தச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்துள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தேர்தல் வரை தயங்கி கொண்டிருந்த மத்திய அரசு, பின்னர் கர்நாடக தேர்தலுக்கு பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்திற்கு தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில் கர்நாடகாவை தவிர மற்ற 3 மாநிலங்களும் உறுப்பினர்கள் பட்டியலை வழங்கி உள்ளன. ஆனால் கர்நாடகா மட்டும் உறுப்பினர்கள் பட்டியலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இந்த நிலையில்  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் 12ம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் உறுப்பினர்களை அறிவிக்குமாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு அந்த கடிதத்தில் கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.