வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (11:27 IST)

ஊரடங்கு கேப்பில் அணை கட்டி முடித்த கர்நாடகா! – தமிழர்களுக்கும் தொடர்பா?

கர்நாடகாவின் மார்கண்டேய நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கு தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கெண்டேய நதியின் குறுக்கே யார்கோல் என்னும் இடத்தில் 414 மீட்டர் அகலமுள்ள அணை ஒன்றை கர்நாடக அரசு கடந்த சில மாதங்களுக்குள்ளாக கட்டி முடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணையால் கிருஷ்ணகிரியின் படேதலாவ் ஏரிக்கும், கே.ஆர்.பி அணைக்கும் நீர்வரத்து குறையும் எனவும், இதனால் 5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த அணையின் கட்டுமான பணிகளில் தமிழகத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனங்கள், ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 25 கட்டுமான நிறுவனங்கள் துணை ஒப்பந்ததாரர்களாக பணியாற்றியதாகவும், அணை கட்டுமான பொருட்கள் தமிழகத்திலிருந்தே கொண்டு செல்லப்பட்டதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.