கற்பூரம், தேங்காய் சகிதம் பக்தி மயமாக குவிந்த மதுப்பிரியர்கள்! – கடை திறப்பால் கொண்டாட்டம்!

Tasmac
Prasanth Karthick| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (10:56 IST)
இன்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் கற்பூரம் காட்டி வழிபட்டது வைரலாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் மதுப்பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். கோவையில் புளியக்குளம் டாஸ்மாக் கடைக்கு சென்ற மதுப்பிரியர்கள் சிலர் தேங்காயில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு பின் மதுபானங்களை உற்சாகமாக வாங்கி சென்றுள்ளனர். ஒரு மாதம் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மது வாங்கி செல்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :