செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (18:21 IST)

புதுவையை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அனுமதி இல்லை என்றும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுவெளியில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது
 
இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்திலும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது