திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (10:10 IST)

காவேரி மருத்துவமனைக்கு குடும்ப உறுப்பினர்கள் வருகை: பரபரப்பு தகவல்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக திமுக பிரமுகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை எதுவும் கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையின் நிர்வாகத்திடம் இருந்து வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இன்று காலை முதல் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். முதலில் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அதனை அடுத்து தற்போது காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இதனையடுத்து ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர்களும் வருகை தந்துள்ளனர்.
 
இதுவொரு வழக்கமான வருகையாக இருந்தாலும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் திமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவார் என்று துரைமுருகன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்த வகையில் கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.