வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (17:41 IST)

இலவு காத்த கிளி, வால் அறுந்த நரி: ஜெயகுமார் ஜாலி டாக்!

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவை யார் விமர்சித்தாலும், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்தால், முதல் ஆளாக வரிந்துகட்டிக்கொண்டு வந்து பதிலடி கொடுப்பவர் அமைச்சர் ஜெயகுமார். 
 
சமீபத்தில் இவர் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என ஸ்டாலின் பேசியுள்ளாரே? இது குறித்து உங்களது கருத்து என்னவென கேட்கப்பட்டது. இதற்கு ஜெயகுமார் பின்வருமாரு பதிலளித்தார், 
 
ஸ்டாலின் இதை ஆரம்ப காலத்திலிருந்தே கூறி வருகிறார். இதை கேட்டுக்கேட்டு புளித்துப்போய் போய்விட்டது. இதைத்தான் 2021 வரை கூறிக்கொண்டே இருப்பார். 2021 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக வெற்றிபெறும். 
 
ஸ்டாலின் இலவு காத்த கிளியாக இருக்கிறார். டிடிவி தினகரன் வால் அறுந்த நரியாக இருக்கிறார். நான் முதல்வராக இருக்கிறேன், நீங்கள் துணை முதல்வராக இருங்கள் என இருவரும் சேர்ந்து சூழ்ச்சி செய்தனர். ஆனால், அது முறியடிக்கப்பட்டு அதிமுக ஆட்சி வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.