அறிவியல் திருடன் எந்திரன் '2.0 ' ! காண காத்திருப்போருக்கு சூப்பர் ட்ரீட்

VM| Last Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (18:26 IST)
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' திரைப்படத்தின் பாடல் வரிதான் கீழ்கண்ட வரிகள்.
 
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இந்த எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்
 
இந்த படம் இந்திய சினிமாவின் அறிவியல். தொழில் நுட்ப வளர்ச்சியில் புதிய உச்சம் தொட்டதால் மெகா ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் '2.0' எனும் பெயரில் உருவாகி வருகிறது. லைகா 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான தொழில்நுட்பம் நிறைந்த படமாக தயாரித்து வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
2.0 திரைப்படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :