வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (13:11 IST)

கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை.! ஆர்.பி உதயகுமார் குண்டுக்கட்டாக கைது.! உச்சகட்ட பரபரப்பு..!!

Udayakumar
கப்பலூர் சுங்கச்சாவடியை இடம் மாற்றம் செய்யக்கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டது.  இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த  மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளூர் மக்களின் பணம் பறிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.  மேலும் இந்த சுங்கச்சாவடியை அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி மக்கள் முழு கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  
 
கப்பலூர்  சுங்கச்சாவடி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும்  சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், சுங்கச்சாவடி தொடர்பாக  பொதுமக்களிடத்தில் மனுக்கள் வாங்க சென்றார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.
 
அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களையும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்,  சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக  அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.