வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (12:58 IST)

அயோத்தி ராமரை தரிசனம் செய்ய ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை .. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

அயோத்தி ராமர் கோவில் உள்பட உத்தர பிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்களை பார்ப்பதற்கு ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அயோத்தி , வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய மூன்று ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா பயணம் செய்ய ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயணம் ஐந்து பகல் மற்றும் நான்கு இரவுகள் கொண்டது என்றும் பயணிகள் தேர்வு செய்யும் வகைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் என்றும் காலை உணவு இரவு உணவு  ஏற்பாடு செய்த தரப்படும் என்றும் சில இடங்களில்  விமானங்கள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.34,720 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சுற்றுப்பயணம் குறித்த முழு விவரம் தெரியிது கொள்ள வேண்டும் என்றால் ஐஆர்சிடிசி  அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று இந்த டூர் பேக்கேஜ் தெரிந்து கொண்டு, தேவைப்பட்டால் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஐஆர்சிடிசி  அறிவித்துள்ளது.

Edited by Siva