திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (17:33 IST)

ஒமிக்ரான் கட்டுப்பாடுகள்... குமரியில் முக்கிய இடங்களுக்கு தடை!

ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்த நிலையில் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் 100ஐ எட்டியுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மத்திய அரசு ஒமிக்ரான் பாதிப்புள்ள பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிக்கு வருவார்கள் என்பதால் கூட்டத்தை தவிர்க்க டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை அருவியில் குளிக்க தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 
அதே போல ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒரு இடத்தில் கூடுவதை தடுக்க பத்பநாதபுரம் அரண்மனை , சர்வதேச சுற்றுலாதலமான குமரிமுனை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் சுற்றுலாபயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.