1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (17:45 IST)

மோசடி வழக்கு - கனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் கைது

சென்னையை சேர்ந்த நகனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்ததற்காக அவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பூபேஷ்குமார் மற்றும் அவரின் மனைவி நீடா ஆகியோர் கே.ஜி.பி.எல் எனப்படும் கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் காஞ்சிபுரம், நடராஜபுரம், புக்கத்துறை ஆகிய இடங்களில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.
 
சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள பிரபல நகைக்கடைகலுக்கு அவர்கள் விதவிதமான டிசைன்களில் நகை தயாரித்து சப்ளை செய்து வந்தனர்.  அதேபோல், கனிஷ்க் என்ற பெயரில் தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வந்தனர். அவர்களும் சென்னை யானைக்கவுனியை சேர்ந்த சிலருடன் கூட்டு சேர்ந்து சென்னையில் உள்ள பல வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றனர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்களின் நிறுவனம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதால் போலி ஆவணங்களை தயார் செய்து எஸ்.பி.ஐ. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.டி.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளில் ரூ. 824.15 கோடி கடன் பெற்றனர். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தாததால், அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை அதிகாரிகள் ஆராய்ந்த போது அவைகள் போலி என்பது தெரியவந்தது.
 
இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். தற்பொழுது  பூபேஷ்குமாரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர்.