வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (21:46 IST)

தேர்தல் பணியால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி: கனிமொழி வலியுறுத்தல்

தேர்தல் பணி காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான உதவியை செய்து தர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார் 
 
ஏப்ரல் 7ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஏராளமான ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் தேர்தல் பணியாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
ஆசிரியர்கள் தேர்தல் பணியை இந்த பெருந்தொற்று காலத்திலும் கடும் சவால்களுக்கு இடையே செய்து முடித்துள்ளனர். இதில் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை  அரசு செய்ய வேண்டும்