1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kanimozhi says about neet exam

நீட் தேர்வு ரத்து குறித்து கனிமொழி பேட்டி!

நீட்
தற்போது கொரோனா சவால்களை தமிழக அரசு எதிர்கொண்டு இருப்பதாகவும் இந்த சவால்களை எதிர்கொண்ட பின் நீட் தேர்வு ரத்து குறித்து வலியுறுத்தப்படும் என்றும் கனிமொழி எம்பி கூறினார். திமுக எம்பி கனிமொழி அவர்கள் இன்று விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
தமிழகத்தில் பரவும் கொரோன நோயை கட்டுப்படுத்துவதற்கும், அதை தடுப்பதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் முதலமைச்சரின் உத்தரவுப்படி, ஒவ்வொரு அமைச்சருக்கும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் அரசின் பணிகளை துரிதப்படுத்தி நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். 
 
கொரோனா நோய் குறித்தான சவால்களை எதிர்கொண்ட பின்னர், நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் நிச்சயம் வலியுறுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
 
 
அடுத்த கட்டுரையில்
மக்கள் நீதி மய்யத்தில் இணையும் சிறுசிறு கட்சிகள்: கமல்ஹாசன் தகவல்