ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (11:05 IST)

பெண்களின் திருமண வயது மசோதா: திடீரென எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி எம்பி!

பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப் போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது என்பதும் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை தாக்கல் செய்தார் இந்த மசோதா மீது விவாதம் நடந்தது என்பதும் அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி அவர்கள் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவுக்கு ஆதரவாளர்கள் இருந்தாலும் எதிர்ப்பாளர்களும் இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார்
 
மேலும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிலைக் குழுவுக்கு அல்லது தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கருத்தை கேட்ட பின்னர்தான் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் 
 
திக, திமுக உள்பட பல கட்சிகள் பெண்களின் திருமண வயது 21ஆக உயர்த்துவதற்கு சமீபத்தில் ஆதரவளித்த நிலையில் தற்போது திடீரென திமுக எம்பி கனிமொழி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது