இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தேர்வா? திமுக எம்பி கனிமொழி கண்டனம்
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் தேர்வுக்கு திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் மேல்நிலைப் பள்ளி படிக்கும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்துக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படுகிறது
இதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இந்த தேர்வை நடத்தி சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
கனிமொழி எம்பியின் இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.