1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (06:56 IST)

கந்தசஷ்டி கவசம் விவகாரம்: யூடியூப் நிர்வாகி அதிரடி கைது

கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்த அவதூறு வீடியோ இணையதளங்களில் வைரலாக வந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த யூடியூப் சேனலுக்கு இந்து அமைப்புகள் உள்பட அனைத்து மத தலைவர்களும், முருக பக்தர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேபோல் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் இந்த அருவருக்கத்தக்க விமர்சனத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் 
 
இந்த நிலையில் இது குறித்து தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கந்த சஷ்டி கவசத்தை தவறாக விமர்சனம் செய்த யூடியூப் சேனலில் நிர்வாகி செந்தில் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கந்தசஷ்டி கவசம் மற்றும் முருகப் பெருமானையும் விமர்சனம் செய்த யூடியூப் சேனலில் பேசியவரும் அவரது மனைவியும் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
 
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த நிலையில் அதன் யூடியூப் நிர்வாகியின் பெயரும் கடவுள் முருகனின் பெயர்களில் ஒன்றான செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது