தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் எங்கள் முதல்வர் தான்: அமைச்சர் ரோஜா
- ''கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம்''- உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
- டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
- வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது- மாரி செல்வராஜ்
- ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்..!
என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு..!
காஞ்சிபுரத்தில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடிகள் ரகு மற்றும் ஹசன் ஆகிய இருவரும் பல்வேறு கொலை வழக்குகளில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இந்த துப்பாக்கி சூட்டில் ரவுடிகள் ரகு ஹசன் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரவுடிகளின் அரிவாள் தாக்குதலால் இரண்டு போலீசார் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டர் காரணமாக காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Siva
