வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:09 IST)

ஓடும் போது கழன்று ஓடிய அரசு பேருந்தின் டயர்: பெரும் விபத்து தவிர்ப்பு!

ஓடும் போது கழன்று ஓடிய அரசு பேருந்தின் டய
தமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலைமை என்ன என்பது அனைவரும் அறிந்ததே. திடீர் திடீரென பிரேக் ஃபெய்லியர் ஆவது உள்பட பல பிரச்சனைகளால் பயணிகள் பெரும் சிக்கலில் இருந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் காமெடி காட்சியாக காரின் டயர் காருக்கு முன்பாக ஓடும் காட்சியை போல் நிஜ சம்பவம் ஒன்று தற்போது காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது.  காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க டயர் திடீரென கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து மிக திறமையாக டிரைவர் அந்த பேருந்தை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார். மேலும் அந்த பேருந்தில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டும் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கூறியுள்ளனர் 
 
கடந்த ஆறு மாதங்களாக பேருந்துகள் ஓடாமல் இருந்த நிலையில் அந்த பேருந்துகளின் தரத்தை உறுதி செய்தபின் பயணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்