வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:47 IST)

அத்திவரதர் கோயிலில் கத்தியுடன் திரிந்த 4 பேர் ! பரபரப்பு சம்பவம்

காஞ்சிபுரம் அத்திவதர்  வைபவத்தில் விஐபி வாகனங்கள் செல்லும் வழியில் பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சி அத்திவரதர் கோவிலில் இன்றுமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார்.அதனால் பக்தர்கள் அலையென அத்திவரதரைக் காண திரள்கிறார்கள். கோவிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 இந்நிலையில்  இன்று அத்திவரதர் வைபவத்தில் விஐபி வாகனங்கள் செல்லும் வழியில் , 4 பேர் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர். அவர்களைப் பிடித்த  கைது செய்த  போலீஸார், தற்போது அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டு பின்னர் சகஜநிலைக்குத் திரும்பினர்.