வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:35 IST)

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த த.மா.கா., இளைஞரணி தலைவர்

yuvaraj
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று சேலத்தில்  அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துளளார்.

விரைவில்   நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இதையொட்டி, அனைத்து தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
 
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று சேலத்தில்  அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த யுவராஜ்,  எடப்பாடி பழனிசாமியுடன்  நேரில் சந்திப்பு, மரியாதை நிமித்தமாக இபிஎஸ்-ஐ சந்தித்ததாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.