ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (13:56 IST)

இனி யாரையும் நம்ப வேண்டாம்! – கமல்ஹாசனின் “நாமே தீர்வு” இயக்கம்

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 1000க்கும் அதிகமான பாதிப்புகளை சென்னை சந்தித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இராயபுரம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளில் பாதிப்பு ஆயிரக்கணக்கில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவலை குறைப்பதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க “நாமே தீர்வு” என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இதன் மூலம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல், வீடுகளில் இருக்க அறிவுறுத்தல், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க ”நாமே தீர்வு” மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.