செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (12:07 IST)

இதுக்கு இல்லையா ஒரு எண்டு?! – 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த எதிர்கட்சிகள் அமளியால் 11வது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் வழக்கம்போல அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுவதால் நாட்டு நலத்திட்ட பணிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறாமல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பாஜக எம்.பிக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.