திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (11:28 IST)

கொரோனா விதிமுறைகளை மீறிய கமல்ஹாசன்!? – விளக்கம் கேட்கும் அரசு!

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட கமல்ஹாசன் உடனடியாக தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து விளக்கமளிக்குமாறு மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவமனையால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் அடுத்த நாளே கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைல்களை பின்பற்றாதது குறித்து கமல்ஹாசன் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.